மாடு வாங்கி விற்கும் வியாபாரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை..!

370

ராணிப்பேட்டையில் மாடு வாங்கி விற்கும் வியாபாரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிமேடு அருகே மாடு ஒரு நபர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்த அக்பர் என்பதும், மாடு வாங்கி விற்கும் வியாபாரம் செய்பவர் என்பதும் தெரியவந்தது.

இன்று சந்தை என்பதால் அக்பர் விடியற்காலையிலேயே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை மறித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.