பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தல்

976

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று மோடியிடம் கேட்டதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கைக்கு சென்ற முதல் வெளிநாட்டு தலைவர் நரேந்திர மோடி தான். இலங்கையில் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். இலங்கை மீண்டும் எழுச்சி பெறும், பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் துணிவை தோற்கடித்துவிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியுன் நடந்த சந்திப்பு குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்போது கூறியுள்ளார். இலங்கைக்கு, இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து ஆதரவு அளித்துவருவது நம்பிக்கையை வலுப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான பயிற்சியை இந்தியா அளிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.