ரணில் இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என தகவல்..!

54

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கடந்த சில வாரங்களாக இலங்கையில் நீடித்து வந்த குழப்பத்திற்கு முடிவு கிட்டியுள்ளது. அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் நடைபெற்ற பனிப்போருக்கு இதன்மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ரணிலின் பதவி நீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிபரின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு, சிறிசேனாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தது. மீண்டும் நாடாளுமன்றம் கூடியபோது அதில் பங்கேற்ற 225 பேரில் 117 பேரின் ஆதரவை ரணில் பெற்றார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்ட பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவி விலகியதை தொடர்ந்து, இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.