ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு!

493

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மையமான ராணி மேரி கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு எழுந்த பல்வேறு சர்சைக்களுக்கு அடுத்து ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைதேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக ஆர்.கே. தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த இடைத்தேர்தலில் 77 புள்ளி 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், ராணி மேரி கல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் துணை ராணுவப்படையினர் உட்பட மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் உட்பட 50-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை மறுநாள் நடைபெறுகிறது.