ராணி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

180

ராணி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகை தன்ஷிகா நடிப்பில், எம்.கே.பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராணி. இயக்குனர் எஸ்.பாணி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தநிலையில், ராணி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் இசைஞானி இளையராஜா, இயக்குனர்கள் சமுத்திரக்கனி, பேரரசு, தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் தேனப்பன் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.