வெங்காயத்தின் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை – மத்திய உணவுத்துறை அமைச்சர் …

749

வெங்காயத்தின் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளிதான் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி குறைவாக உள்ளது என்றும், வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.