அரசு முறை பயமாக வியட்நாம் சென்றார் ராம்நாத் கோவிந்த் : இரு நாடுகள் நல்லுறவு குறித்து ஆலோசனை

116

அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பழமையான இந்து கோவிலை பார்வையிட்டார்.
#Ramnathkovind #India

அரசு முறைபயணமாக வியட்நாம் சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவியை, வியட்நாம் அதிபர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட மை சன் கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்து ரசித்தார். இதனை தொடர்ந்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது குறித்து வியட்நாம் நாட்டின் அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்துகிறார்.