குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர் தின வாழ்த்து..!

312

ஆசிரியர் தின விழாவையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும் என்று கூறியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் அறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கேட்டு கொண்டுள்ளார்.

இதே போல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஆசிரிய சமூகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இளம் மனங்களை வடிவமைப்பதிலும் தேசத்தை கட்டமைப்பதிலும் ஆசிரியரிகளின் பங்களிப்பு முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.