சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

273

sardar-singhசிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. துரோணாச்சாரியா, தாயன் சந்த், அர்ஜுனா, கேல் ரத்னா விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். கிரிக்கெட் வீரர் புஜாரா, ஹர்மண் ப்ரீத் கவுர், வருண் சிங், தமிழக வீரர்கள் மாரியப்பன், ஆரோக்கிய ராஜ், அமல்ராஜ் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருதுகளை வழங்கி ராமநாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.