ராம்குமாரின் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றகோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

150

ராம்குமாரின் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றகோரி திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மின்சாரத்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில், காவல்துறை மற்றும் சிறைதுறையினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியும் இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றகோரி மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.முருகேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர்.