ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபம் திறப்பதற்கான இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

223

ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபம் திறப்பதற்கான இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27 -ம் தேதி மரணமடைந்தார். அவரை நல்லடக்கம் செயத பேய்க்கரும்பு என்னுமிடத்தில் நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபம்
வரும் ஜூலை 27ஆம் திறக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் திறப்பு விழா அன்று, நினைவிட வளாகத்தில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. அதில் அப்துல்கலாம் கண்டுபிடித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இடம் பெறுகிறது. இதற்காக 63 அடி உயரத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு உள்ளார்.