ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது-திருமாவளவன்!

295

குடியரசு தலைவர் வருகைக்காக மீனவர்களை கடலுக்கு செல்ல கூடாது என கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கூறினார். குடியரசுத் தலைவர் ராமேஷ்வரம் வருவதையொட்டி மீனவர்களை கடலுக்கு செல்லக்கூடாது என கூறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த திருமாவளவன், இதுவரை இல்லாத ஒரு நடைமுறை இது என்று சுட்டிக் காட்டினார்.