ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பலத்த காற்று வீசியதால் சென்னைக்கு செல்லும் இரண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன.

பாம்பன் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயிலில் சென்ற பயணிகள் நடுவழியில் இறக்கப்பட்டன. மேலும் சென்னைக்கு செல்லும் இரண்டு விரைவு ரயில்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், ஏராளமான ரயில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக பலத்த காற்று காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .