கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் 1500பேர் விரட்டியடிப்பு..!

131

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை துப்பாக்கிக் காட்டி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாககூறி அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி காட்டி விரட்டியடித்தனர். மேலும் அவர்களின் 10 விசைப்படகில் இருந்த வலைகளையும் அறுத்தெறிந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

இதனால் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர். ,இதே போன்று கடந்த 20ம் தேதியும் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். மீனவர்கள் தொடர்ந்து விரட்டியடிக்கப்படுவதால் தங்களது வாழ்வதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் மக்கள் தெரிவித்துள்ளனர்.