ராமேஸ்வரம் கோயிலில் நேபாளம் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாரியா குடும்பத்துடன் சாமி தரிசனம் ..!

750

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேபாளம் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாரியா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரத்துக்கு நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாரியா இன்று குடும்பத்துடன் வருகை தந்தார். அதிகாலை ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வந்தவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு குடும்பத்துடன் ஸ்படிகலிங்க தரிசனம் செய்த பாபுராம் பட்டாரியா அக்னிதீர்த்த கடலிலும், கோயிலின் உட்புறம் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். தொடர்ந்து ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். இதையடுத்து மேலவாசல் அருகே 1948ம் ஆண்டு வாக்கில் நேபாள மன்னரால் கட்டப்பட்ட கட்டிடத்தை பாபுராம் பட்டாரியா பார்வையிட்டார். இதையடுத்து தனுஷ்கோடிக்கு சென்ற பாபுராம் பட்டாரியா அதன்பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பின் நேபாளம் செல்கிறார்.