டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்..!

155

டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்களுக்கு நிர்ணயமான விலை கிடைக்காததை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கடலுக்கு சென்று மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும்போது வியாபாரிகள் மீன்களுக்கு நிர்ணயமான விலை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் மீனவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலையில், வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மீனவர்கள், மீன்களுக்கு நிர்ணயமான விலை கிடைக்காததை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாம்பன் துறைமுகத்தில் 850 படகுகளும், மண்டபம் துறைமுகத்தில் 500 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.