விசைப்படகுகளை மீட்க இலங்கை சென்ற மீட்புக் குழுவினர்

151

இலங்கையில் மீட்கப்பட்ட 9 விசைப் படகுகள் சேதமடைந்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 விசைப் படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. இதனை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் சென்றபோது, கடலில் மூழ்கிய நிலையில் இருந்த 9 விசைப்படகுகளை இலங்கை அரசு ஒப்படைத்தது. மீட்கப்பட்ட 9 விசைப் படகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால் ஒரு விசைப் படகுக்கு 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.