மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்..!

946

இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்கள் மற்றும் 187 படகுகளை விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்கள் மற்றும் 187 படகுகளை விடுவிக்கக்கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. படகுகளை இழந்து நிற்கும் மீனவ குடும்பங்களுக்கு 25 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், மீனவர்களுக்கு எதிராக, இலங்கை அரசு நிறைவேற்றிய புதிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர் பிரச்சினை தொடர்பாக, முதலமைச்சர் , மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.