கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்குள் சென்றனர்.

223

கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்குள் சென்றனர்.
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 4 மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், சிறைபிடிக்கப்பட்ட 104 விசைப்படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.