ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைப்பிடிப்பு | கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அத்துமீறல் ..!

304

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களை விரட்டினர். அத்துடன் மீனவர்களின் படகில் ஏறி, வலைகளை அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு படகில் வந்த 7 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்ட்டனர்.
இதனிடையே மற்ற மீனவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.