தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் | பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

111

கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுவீசி தாக்குல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள், அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக மீனவர்களின் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அங்கு விரைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தமிழக மீனவர்களை எச்சரித்து விரட்டி அடித்தனர். இதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பினர். இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்படையினர் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.