நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதாக ராமேஸ்வர மீன்வர்கள் அறிவித்துள்ளனர்.

294

நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப் போவதாக ராமேஸ்வர மீன்வர்கள் அறிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பை தொடர்ந்து, டீசல் பிடிக்க மீனவர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, நடமாடும் தனி வங்கி அமைத்து தர வலியுறுத்தி, 17 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.