பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பு..!

170

பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் ரமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

பாம்பன் பாலத்தில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால்,ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பாம்பன் ரயில் நிலையம் அருகில் உள்ள அக்காள்மடம் முன்முகப்பில் நிறுத்தப்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும், ரமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனிடையே, காற்றின் வேகம் குறைந்தால் மட்டுமே, ராமேஸ்வரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து ரயில்களையும் இயக்கக்கூடும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.