ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் தெப்பத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

144

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் தெப்பத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழா நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்படிக லிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் லெட்சுமணேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினர். பின்னர், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, லெட்சுமணேஸ்வரர் குளத்தில் தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள கலந்து கொண்டனர்.