ராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

220

ராமேஸ்வரத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இலங்கை அரசு அதனை திரும்பப்பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து கடந்த 4 நாட்களாக, ராமேஸ்வரம் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாதநிலையில், நூற்றுக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. மீனவர்களும் தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், ராமநாதபுரம் மீன்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது, புதிய மசோதாவை ரத்து செய்ய இலங்கை அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அதிகாரிகளின் சமாதான பேச்சு வார்த்தையை ஏற்றுக்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.