புனித அந்தோணியார் தேவாலய திருவிழா | பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதி

73

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 2 ஆயிரத்து 253 பக்தர்கள் 80 படகுகளில் புறப்பட்டு சென்றனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 80 படகுகளில் 2 ஆயிரத்து 253 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக கச்சத்தீவு செல்லுவோருக்கு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு படகில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் கச்சத்தீவு செல்லும் பக்தர்கள், இன்று மாலையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கொடியேற்றத்துடன் தொடங்கி வைக்கும் திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். இதனை தொடர்ந்து திருப்பலி சிலுவை பாதை தேர் பவனி நடைபெறுகிறது.