சேலம் 8 வழி பசுமை சாலையை கடுமையாக எதிர்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் 8 வழி பசுமை சாலையை எதிர்த்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறினார். மேலும் 8 வழி பசுமை சாலை அமைப்பது குறித்து 5 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக் கணிப்பு நடத்த உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.