அரசியல் பொறுப்பு பற்றி பேசும் நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா -பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!!!

148

அரசியல் பொறுப்பு பற்றி பேசும் நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் பல இடங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் புகைப்பிடிக்கும் காட்சிகள் தேவையில்லை என்ற போதிலும்,
மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் விஜய் அப்பட்டமாக புகைப்பிடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்,அரசியல் பொறுப்பு பற்றி பேசும் சர்கார் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.