ராம நவமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு | திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை

343

ராமநவமியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் கிருஷ்ணபட்ச நவமி திதியில் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக வழிபடுகிறோம். ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும், பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ராமரை வழிபட்டு விரதம் மேற்கொண்டால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. இதனை முன்னிட்டு, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ராம நவமி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடத்தினர்.
மேலும் மும்பையில் உள்ள கோவில்களில் ராம நவமியை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, வாரணாசியிலும் ராம நவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும் அங்குள்ள கங்கை நதியில் புனித நீராடி மகிழ்ந்தனர்.