ராமநாதபுரத்தில் மூலிகை சிலை கடத்தியதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

187

ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் குருக்கள். இவரது வீட்டில் உள்ள பழமையான முருகன் மூலிகை சிலையை 3 கோடி ரூபாய்க்கு விற்க உள்ளதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பஜார் போலீசார், ராஜலிங்கம், சிங்கம், ரமேஷ் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மூலிகை சிலையை மீட்ட போலீசார், தப்பியோடிய சுரேஷ் என்பவரை தேடிவருகின்றனர்.