ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

154

ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் தாய்-மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம் செய்யலூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, இவரது மனைவி சண்முகவள்ளி, மகன்கள் பாரூக் மற்றும் ராமதாஸ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏர்வாடி அரகே வந்தபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகவள்ளி மற்றும் பாருக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் விபத்தில் காயம் அடைந்த ராமதாஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.