பதவி விலகும் முடிவை மாற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி..!

203

பதவி விலகும் முடிவைத் திரும்பப் பெறப் போவதாகவும், அரசின் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி, முன்னாள் அமைச்சரும் ஆவார். பதவி விலகுவதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்த எம்எல்ஏக்களில் ராமலிங்க ரெட்டியும் ஒருவர். சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு இன்று நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர உள்ளது. இந்நிலையில் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமலிங்க ரெட்டி, பதவி விலகல் கடிதத்தைத் திரும்பப் பெறப் போவதாகவும், சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும், நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.