எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

278

எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், எலிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். குட்கா ஊழல்வாதிகளிடம் சுகாதாரத்துறையும், ஒப்பந்த ஊழல் பேர்வழிகளிடம் உள்ளாட்சித் துறையும் இருந்தால் இப்படித் தான் நடக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், மக்கள் விலை மதிப்பற்ற உயிரை இழந்துவிடக்கூடாது என்று கூறியுள்ள ராமதாஸ், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் எலிக்காய்ச்சல் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என வலியுறு்த்தியுள்ளார்.