மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகளை, மத்திய அரசு தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிடுவது சரிதானா என்று டாக்டர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

195

மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகளை, மத்திய அரசு தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிடுவது சரிதானா என்று டாக்டர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலை தனியார் நிறுவனங்கள் தயாரித்துள்ளதை சுட்டிகாட்டியுள்ளார். ஒரு மாநில முதலமைச்சரின் செயல்பாடுகளை, மத்திய அரசு தன்னிச்சையாக ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் வெளியிடுவது சரிதானா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசும், மாநில அரசும் தண்டவாளம் போல் இணைந்து செயல்படவேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். அதைவிடுத்து மாநில அரசுகளின் செயல்பாடுகளை தனியார் மற்றும் உளவுத்துறை மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குவதும், தரவரிசை தயாரிப்பதும் ஆரோக்கியமானது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செயல்பாடுகள் மத்திய, மாநில அரசுகளுக்கிடைய ஏற்றத்தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். எனவே இந்த விஷயத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், இதிலிருந்து மாநில அரசுகள் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளமாக உள்ளதாக தமது அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.