நியாயமில்லாத நிவாரண நிதி என கவலை – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

145

தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் பாதிப்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவுி, மக்கள் கோபத்தை தணிக்கவில்லை; மாறாக கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை என குறிப்பிட்டுள்ளார். நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவி, சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது என்று தெரிவித்துள்ள ராமதாஸ்,

எட்டு வழிச்சாலைக்காக எடுக்கப்படும் தென்னைக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கும்போது, புயலால் பாதிக்கப்பட்ட தென்னைக்கு 600 ரூபாய் வழங்குவது நியாயமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, புயல் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து, அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.