திராவிடக்கட்சிகளுடன் பா.ம.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

271

திராவிடக்கட்சிகளுடன் பா.ம.க. ஒரு போதும் கூட்டணி வைக்காது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 29-வது ஆண்டு துவக்க விழா, சென்னை தி.நகரில் உள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி விழாவினை சிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியலில் வெற்றிடமான சூழ்நிலை நிலவுவதாகவும் அதனை பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே நிரப்பும் என்றார். அதிமுக, திமுக அல்லாத கட்சி எதுவாக இருந்தாலும் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று கூறிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றார்.