பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் : பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

398

பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அதிகளவில் ஊழல் நடைபெற்ற 5 பல்கலைக்கழகங்களை எடுத்துரைத்துள்ளார்.
பல்கலைக்கழக ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் துணைவேந்தர்களை மட்டும் மையப்படுத்தி இருந்து விடக் கூடாது என்றும், கையூட்டு பெற்று செய்யப்பட்ட அனைத்து பணி நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்களில் நடந்த ஊழல்கள் பற்றி விரிவான குற்றச்சாட்டு பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் விரைவில் வழங்கும் எனவும் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.