அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

146

அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களுக்கு 244 ரூபாய் முதல் 3,080 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைப்பது போதுமானதல்ல என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, அடுத்த 3 மாதங்களில் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுவரை 50 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ள மருத்துவர் ராமதாஸ்,
அடிப்படை ஊதியத்தில் 15 சதவீதத்தை இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.