இந்தியாவில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

155

கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனத்தலைவர் டாக்டர்.ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டகேள்விக்கு பதில் அளித்த டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களில் 300 விவசாயிகள் இறந்துள்ளதை சுட்டிக்காட்டி, இதனை எந்த அரசும் கண்டுக்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கிடையில் இந்தியாவில் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்