சகோதரத்துவத்தின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

368

சகோதரத்துவத்தின் பாசத்தை வெளிப்படுத்தும் ரக் ஷா பந்தன் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் தாம் சகோதரர்களாக கருதுபவர்கள் மீது ராக்கி எனும் கயிற்றை கட்டி பாசத்தை வெளிப்படுத்துவர். ஆவணி மாதம் பவுர்ணமி நாளன்று ஆண்டு தோறும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் வடமாநிலங்களில் ரக் ஷா பந்தன் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் காலை முதலே தங்களது சகோதரர்களுக்கும், சகோதரராக கருதபவர்களுக்கும் ராக்கி கயிறை கட்டியும் இனிப்புகளை வழங்கியும் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னையில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரக் ஷா பந்தன் விழா களை கட்டி உள்ளது.