மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

278

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதா மீதாமாநிலங்களவையில் இன்று தொடங்கியது.

திருத்தப்பட்ட மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தொடங்கி வைத்து பேசுகையில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலுக்கு வந்தால் வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும் எனவும், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு இந்த ஜி.எஸ்.டி மசோதா மூலம் வருமானம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி மசோதா அமலுக்கு வந்தால் வரிக்கு வரி கட்டுவது தவிர்க்கப்படும் என கூறிய அவர், இதன் மூலம் பொருட்களின் விலை கணிசமாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும்
ஜி.எஸ்.டி மசோதா தொழில்நுட்பத் துறைக்கும் உறுதுணையாக இருக்கும் எனவும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எதிர்த்தது இல்லை என தெரிவித்தார். முந்தைய மசோதாவில் ஏராளமான குறைகள் இருந்ததாகக்கூறிய அவர், எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லாமலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயன்றததாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் உள்ள சில அம்சங்கள் கூட்டாட்சி தத்துவம் மற்றும்
அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த மசோதா அமலுக்கு வந்தால் தமிழகத்தின் வருவாயில் கணிசமான இழப்பு ஏற்படும் என தெரிவித்த அவர், இந்த மசோதா மூலம் எந்த பயனும் இல்லை என்றும் கூறினார். மேலும் இந்த மசோதாவில் அதிமுக கொண்டுவந்துள்ள திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், வரி விகிதம் எவ்வளவு என்று தெரியாமல் எப்படி மசோதாவை நிறைவேற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் பெட்ரோலியம் உள்ளிட்ட பொருட்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்கவேண்டும் எனவும், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் எனவும் நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார்.