அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்புக்கு எதிர்ப்பு | அதிமுக எம்பி-க்கள் அமளியால் அவை ஒத்திவைப்பு

126

அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, அதிமுக எம்பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசை வலியுறுத்தி, அதிமுக எம்பி-க்கள் கூச்சலிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மாநிலங்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், இதே நிலைமை நீடித்ததை அடுத்து, மீண்டும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.