காங்கிரஸ் எம்.பி யை பிச்சை எடுப்பவர் என விமர்சித்த மோடி..!

234

மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் குறித்த பிரதமர் மோடியின் கருத்தை அவைக்குறிப்பிலிருந்து அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அதிரடியாக நீக்கியுள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் தோல்வியடைந்தார். இந்த நிலையில், புதிய மாநிலங்களவை துணைத்தலைவரை வாழ்த்தி பேசிய பிரதமர் மோடி, ஹரி என்ற பெயர் கொண்ட இருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், இதில் பி.கே என்ற இனிஷியலை கொண்ட ஹரிபிரசாத் தோல்வியடைந்ததாகவும், கேலி செய்யும் தொனியில் பேசினார். இந்தியில் பீக் என்றால் பிச்சை எடுப்பவர் என்ற பொருள் வரும்.

இதனை மனதில் கொண்டே பிரதமர் மோடி இவ்வாறு பேசியதாக குற்றம்சாட்டிய எதிர்கட்சியினர், அவரது கருத்தை சபைக்குறிப்பில் நீக்க வலியுறுத்தினர். இதனையடுத்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பிரதமர் மோடியின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவது அபூர்வமானது என்பது என கூறப்படுகிறது.