குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

160

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டின் 68-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி, டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, ராணுவ வீரர்களின் பைக் சாகசங்கள், விமானப்படையினரின் ஹெலிகாப்ட்டர் மற்றும் போர் விமான சாகசங்கள், அரசு துறைகளின் வாகன அணிவகுப்புகள் ஒத்திகை பார்க்கப்பட்டது. வீரர்கள் மிடுக்காக நடைபோட்டு அணிவகுப்பு நடத்திய காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.