ஆந்திராவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றும் – அமைச்சர் ராஜ்நாத் சிங்

358

ஆந்திராவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஆந்திராவில் போராட்டம் வெடித்துள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ஆந்திராவுக்கு வாக்குறுதிகளை அளித்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது மத்திய பா.ஜ.க அரசுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் ஆந்திர பிரதேசம் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதேசமயம் வருவாய் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஆந்திராவுக்கு 22 ஆயிரத்து 123 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.