பட்டினியில் வாடும் எல்லை பாதுகாப்பு படை வீரர் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு !

104

எல்லை பாதுகாப்பு படை வீரரின் புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மிரில் 29 வது படைபிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் என்ற வீரர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 11 மணி நேரம் தொடர்ந்து மோசமான தட்பவெட்ப நிலையில் பணிபுரியும் தங்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து தங்களுக்கு ரொட்டியும், பால் மட்டுமே வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், காய்கறிகளோ, ஊறுகாயோ வழங்கப்படவில்லை என்றார். இந்த உணவும் சரியான முறையில் தங்களுக்கு வழங்கப்படாததால், பல நாட்கள் பட்டினியுடன் தூங்க செல்வதாக வேதனையுடன் கூறியுள்ள யாதவ், இந்த வீடியோ வெளியான பிறகு தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வீடியோவில், வீரர்களின் உணவுகளையும் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில், போராடும் வீரர்கள் பட்டினி கிடப்பதாக வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.