ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி ..!

1394

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக அரசின் அரசாணைப்படி 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார். நளினியின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டினர். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், நளினியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.