ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமாக இருந்த வெடிகுண்டை தயாரித்தது யார்? ஆகஸ்ட் 23க்குள் சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

392

ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமாக இருந்த வெடிகுண்டை தயாரித்தது யார்? என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ் கொலைக்கு காரணமாக இருந்த வெடிகுண்டை தயாரித்தது யார்? என்றும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? எனவும் சிபிஐக்கு, அரசு வழக்கறிஞர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் பதில் அளிக்கவும், அவர்கள் உத்தரவிட்டனர்.