7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு, ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என அரசு தரப்பில் வாதம்

79

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரிய நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய நளினி மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமி்ழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது, தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, 7 பேர் விடுதலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.