ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு..!

255

ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கவர்னருக்கு பரிந்துரை செய்வது என்று தமிழக அமைச்சரவை முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில், மத்திய அரசும், தமிழக அரசும் அரசியல் செய்து வருவதாக கூறினார்.

மத்திய அரசும், தமிழக அரசும் தீவிரவாதம் குறித்த விவகாரத்தில், மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு ராஜீவ் கொலை கைதிகள் மீது விரோதம் இல்லை என்று கூறிய ரந்தீப் சுர்ஜேவாலா, தீவிரவாதிகளை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்பதுதான் காங்கிரசின் தெளிவான நிலைப்பாடு என்று தெரிவித்தார்.